குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம்...
இணையவழிக் கல்விவானொலி எனும் கூட்டு முயற்சி...
கல்வி ரேடியோவின் சிறப்பு பகுதி
Special Program [KRISP]
சிறப்பு தினங்கள் & தேசிய விழாக்களை போற்றும் வகையில்
மாணவர்களை தன்னார்வமாக பங்கேற்கச் செய்து குரல்[Audio] பதிவு செய்து அனுப்பலாம்.
பாடப்புத்தக பகுதிகள், எண்ணும் எழுத்தும் பகுதிகள், பயிற்சிப்புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ்., மேலும் செய்தித்தாள், வாரமலர், சிறுவர்மலர் போன்றவைகளை பயன்படுத்தி மாணவர்களை தன்னார்வமாக பங்கேற்க வழிகாட்டி அவர்களின் குரல் பதிவு செய்து அனுப்பலாம்.
Audio அனுப்பவேண்டிய Telegram Details
மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டவேண்டும்.
மாணவர்கள் Audio பதிவு செய்ய விரும்புவதை திட்டமிட்டுக்கொண்டு முதலில் அனைத்தையும் எழுத வேண்டும்.
எழுதியதை பேசிப் பயிற்சி எடுத்துக்கொள்ளவும். பிறகு Audioகளை பதிவுசெய்தல் சிறப்பு. [பார்த்தோ, பார்க்காமலோ பேசலாம்]
நிறுத்தி, நிதானமாக மற்றவர்கள் கேட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் குரல் ஏற்றத்தாழ்வுகளோடு [வெளிப்புறச் சத்தங்கள் இல்லாச் சூழ்நிலையில்] Audioகளை பதிவுசெய்யவும்.
Audioகளை Audio Recordல் பதிவு செய்யவும் , நேரடியாக Telegramல் பதிவுசெய்து அப்படியே அனுப்புவதை தவிர்க்கவும். இயலுமெனில் Recorderல் பதிவுசெய்தவுடன் Rename செய்து Save செய்யவும். பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள Telegramக்கு அனுப்பவும்.
மாணவர்கள் ஒவ்வொரு Audio-வின் தொடக்கத்திலும் வணக்கம் என்று ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து மாணவர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் , ஒன்றியம் , மாவட்டம் போன்றவற்றைக் கூறவும். பின் தனது தலைப்பினை பற்றிப் பேசவும். இறுதியாக நன்றி கூறி நிறைவு செய்யவும்.
இவ்வாறு மாணவர்கள் தன்னார்வமாக பேசிய ஆடியோக்களை வழிகாட்டி ஆசிரியரோ அல்லது தலைமை ஆசிரியரோ ஓரிரு முறை கேட்டுப் பார்த்து பின்பு மிகச் சரியானதை மட்டுமே நம் இணையவழி கல்விவானொலி குழுவிற்கு அனுப்பவும்.
ClickHere to Download - Guided Teacher's Letter PDF
மேலும் தகவல்கள் பெற
join Whatsapp groups
https://www.kalviradio.com/Groups - Clickhere to join
ஏதேனும் சந்தேகங்களெனில் மாலை 6 மணிக்கு மேல்
தொடர்புகொள்ளவும் 79041 63487