மின்மினிகள் மின்னிதழ்
Twinkle Stars E-Magazine

கடந்த மூன்று வருடங்களாக
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியாக

இணையவழிக்கல்விவானொலி [ஆன்லைன் கல்வி ரேடியோ] எனும் எளிய தொழில்நுட்பம் மூலம்
குரல் பதிவு எனும் எளிய செயல்பாட்டை முன்னிறுத்தி
மாணவர்களின் கற்றலை வலுப்படுத்துவதற்கும், வாசித்தல் & பேச்சாற்றலை மேம்படுத்துவதற்கும் தன்னார்வ செயல்பாடுகள் அளித்து, மாணவர்கள் பயன்படுத்துவதற்கும் , பங்கேற்பதற்குமான வாய்ப்பை  ஏற்படுத்தி தொடர்ச்சியாக பயணித்து வருகிறோம்.

தற்போது மாணவர்களின் தன்னார்வத்தின் அடிப்படையில் எழுதுதல், வரைதல், கற்பனைத்திறன் போன்ற பல்வேறு திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும்,அதனை ஊக்கப்படுத்தி பாராட்டும் வகையில் அனைவருக்கும் காட்சிப்படுத்தும் நோக்கத்திற்காக
இதோ மின்மினிகள் என்னும் மின்னிதழ்
Twinkle Stars E-Magazine

Coordinated by
Tr.Shanmugalakshmi Melur , Madurai
&
Tr.Sudha Perumbandi,  Tanjavore
Supported by Online KalviRadio Team

படைப்புகளை அனுப்பவேண்டிய Telegram Details
Telegram Number  96776 25761
or
use this Telegram Link
https://t.me/minminikal

மாணவர்களின் படைப்புகளை வழிகாட்டி ஆசிரியரோ அல்லது தலைமை ஆசிரியரோ ஓரிரு முறை சரிபார்த்து  பின்பு நம் இணையவழி கல்விவானொலி குழுவிற்கு அனுப்பவும்.

Displaying Photo என்பது பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் தனிதனியே அவரவர் அவரவரின்  படைப்புகளை காட்சிபடுத்தும்படியாக புகைப்படம் எடுப்பதாகும். [அந்தந்த மாதம் கொடுக்கப்படும் தலைப்புகள் சார்ந்த படைப்பு]

இவ்வாறு எடுக்கும் போது மாணவரும், அவரின் படைப்புகளும் தெளிவாகத் தெரியவேண்டும்.

மேலும் பின்புறத்தில் பள்ளியின் பெயர், ஊர், வட்டம், மாவட்டம் போன்ற தகவல்கள் அனைத்தும் தெரியும்படி இருக்கவேண்டும். [பள்ளியின் பெயர்ப் பலகை அல்லது தகவல் பலகை அல்லது கரும்பலகையில் எழுதி அதனை பின்புறத்தில் பயன்படுத்தவும் அல்லது Photoவில் Edit செய்யவும்.]

பங்கேற்ற அனைத்து மாணவர்களின் Displaying Photo அனுப்பிவிட்டீர்கள் எனில் “Completed All Participants Displaying Photo” என்ற Message அனுப்பவும்.

மேலே Displaying Photo அனுப்பியவர்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து, அந்த படைப்பை மட்டுமே மிக தெளிவாக புடைப்படம் எடுத்து அனுப்பவேண்டும். அதனை தொடர்ந்து அந்த படைப்பை உருவாக்கிய மாணவரின் புகைப்படம், முழு தகவல் அனுப்பவேண்டும்.

ஒரு வகுப்பிற்கு ஒரு Drawing, ஒரு கவிதை அல்லது கட்டுரை என தேர்ந்தெடுத்து

தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டீர்கள் எனில் “Completed Selected Student's Details” என்ற Message அனுப்பவும்.

மாணவர்கள் Audio பதிவு செய்ய விரும்புவதை திட்டமிடுவதற்கு முதலில் அதனை தவறில்லாமல் எழுதிபார்க்க அறிவுறுத்தவும். [அந்தந்த மாதம் கொடுக்கப்படும் தலைப்புகள் சார்ந்த படைப்பு].

மாணவர்கள் எழுதியதை பார்த்தோ, பார்க்காமலோ சிலமுறை பேசி பயிற்சி எடுத்துக்கொள்ளவும். பிறகு Audioகளை பதிவுசெய்தல் சிறப்பு.

நிறுத்தி, நிதானமாக மற்றவர்கள் கேட்டு புரிந்துகொள்ளும்படி குரல் ஏற்றத்தாழ்வுகளோடு பேச வேண்டும்.

Audioகளை MP3 Audio Recordல் பதிவு செய்யவும் , Recorderல் பதிவுசெய்தவுடன் இயன்றால் Rename செய்து Save செய்யவும். பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள Telegramக்கு அனுப்பவும்

ஒவ்வொரு Audio-வின் தொடக்கத்திலும் வணக்கம் என்று ஆரம்பித்து அதனை தொடர்ந்து மாணவர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் , ஒன்றியம் , மாவட்டம் போன்றவற்றை கூறவும். பின் தனது தலைப்பினை பற்றி பேசவும். இறுதியாக நன்றி கூறி நிறைவு செய்யவும்.

அனைத்தையும் அனுப்பிவிட்டீர்கள் எனில் “Completed Students Audio” என்ற Message அனுப்பவும்.

மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர், ITK தன்னார்வலர்கள் ஆகியோர்கள் அவரவர்களின் புகைப்படம், முழு தகவல் அனுப்பவேண்டும். [பெயர் , பதவி, பள்ளி பெயர், ஊர், ஒன்றியம், மாவட்டம், Cell]

ஏதேனும் சந்தேகங்களெனில் மாலை 6 மணிக்கு மேல் 

தொடர்புகொள்ளவும் 79041 63487